பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு.
♦️கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
♦️கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
♦️அவர் மேலும் கூறுகையில், முதற்கட்டமாக நாடு முழுவதும் 100ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
♦️பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
♦️சுமார் 2,42,000 ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
♦️இவ்வாறு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment