Breaking News

Sunday, 1 August 2021

பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு)

 பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு)  

அரச ஊழியர்கள் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென வெளியான சுற்று நிருபத்தின் படி கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் இன்று(1) வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளன.


அந்தக் கடிதத்தில், எமது கோரிக்கைகள் தொடர்பாக ஆகஸ்ட் 2ஆம் தேதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் திகதி தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.


இந்தப் பின்னணியில் பாடசாலைகளுக்கு கடமைக்கு வருமாறு அழைத்துள்ளீர்கள். ஆனால் தற்போது நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் பாடசாலைகளுக்கு வருவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளன.
குறித்த கடிதத்தை கீழே காணலாம்.



Read more ...