Breaking News

Friday, 9 July 2021

இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள அதிரடி  தீர்மானம்!
    July 10, 2021


♦️எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

♦️இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொள்ளாமல், தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

♦️கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆசிரியர் சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

♦️அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரை, இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 இராணுவத்தினரை பாடசாலைகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை இலங்கை ஆசிரியர்  சங்கம் எதிர்க்கிறது! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

No comments:

Post a Comment